Wednesday, May 13, 2020

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 4

ராகுல்: ம்ம்.. 1 வருசமா ஒரு பையனை லவ் பண்ணுது கரெக்ட் ஆ!!!

அவ்வளவு தான் கிஷோருக்கு நெஞ்சு வெடித்தது.
 
அடுத்த நொடி உயிரோட இருப்போமா? இருக்க மாட்டோமா? ன்னு தெரியாம வாழ்க்கைய தைரியமா கடந்து போயிட்டு வாழுற சிலர் இருக்குற இதே உலகத்துல தான், ரொம்ப  சின்ன சின்ன பிரச்சனைக்கு உயிரே போற மாதிரி தன்னையும் வருத்திகிட்டு தனக்கு பக்கத்துல இருக்குறவங்களையும் வருத்துற பலர் இருக்குறாங்க..
 
இந்த பலர் ல ஒரு ஆள் தான் இந்த  கிஷோர்.. ஏனென்றால் 
 
இன்னைக்கு காலைல தான் ஒரு பொண்ணை பாத்தான். ஆனா அந்த பொண்ணு மனசுல ஏற்கனவே ஒருத்தன் இடம் பிடிச்சுட்டான்.. அதுக்கு போயி ஏதோ இவன் தலைல இடி விழுந்த மாதிரி தனது வீட்டில் தனது அறையில் சுவர் ஓரமாக உக்காந்து இருந்தான்.. போதாக்குறைக்கு தனக்கு 6 அடி தூரத்தில் இருந்த எதிர் சுவரில் ஒரு ரப்பர் பந்தை வைத்து எரிந்து அது திரும்ப கைக்கு வந்தவுடன் மறுபடியும் எரிந்து இதையே ஒரு அரை மணி நேரமாக அந்த பந்தை பிடித்து பிடித்து எரிந்து கொண்டிருந்தான்..
 
வீட்டுக்கு கொள்ளை புறத்தில் துணிகளை துவைத்து கொடிகளில் காயப்போட்டு விட்டு உள்ளே வந்த கிஷோரின் அம்மா வீட்டுக்குள்ள இருந்து  வந்த பந்து சுவற்றில் அடிக்கும் எதிரொலியான "தொப் தொப்" சத்தத்தை கேட்டு "என்ன இது யாரும் இல்லாத வீட்டுல தொப்பு தொப்பு சத்தம் வருது?? வெளியூருக்கு போன மனுஷன் திரும்ப வர நைட் ஆகிடும், ஒரு வேல கிஷோர் திரும்ப வந்திருப்பானோ" என நினைத்து ஒலி வந்த திசையை நோக்கி சென்று கிஷோர் அரைக்குள் சென்றாள்  கிஷோரின் அம்மா அம்சவேணி..
 
பேருக்கு ஏத்த மாதிரி ரொம்ப அம்சமா இருப்பாங்க அந்த அம்மா.. அவங்களோட 20 வயசுல அப்பா அம்மா பேச்சுக்கு மறுபேச்சு பேசாம நாக ராஜன் என்றவருக்கு கழுத்தை நீட்டி அன்றிரவே அவரின் விந்தணுவை வாங்கி தனது கருமுட்டையில் வைத்து பத்து மாதம் சுமந்து பின் வயிற்றில் இருந்து கிஷோரை இறக்கி வைத்து  அடுத்த 4 வருடத்தில் ராம் குமார் ன்னு இன்னொரு குழந்தையும் அழகாக பெற்றெடுத்தவள் தான் இவள்..
 
கிஷோரின் அறைக்குள்ளே வந்த அம்சவேணி: (முந்தானையால் முகத்தில் வடிந்த வேர்வையை துடைத்து கொண்டே) டேய் கிஷோரு உன் பிரண்ட் ஒருத்தனுக்கு எடுபிடி வேலை பாக்க போறேன்னு சொன்ன.. எப்போ டா வந்த.. 
 
கிஷோர் திரும்பி அம்மாவை முறைத்து பார்த்து "ப்ப்ச்ச்ச்ச் " என்ற சத்தத்தோடு அம்மாவை அலட்சிய படுத்தி விட்டு மீண்டும் சுவற்றில் பந்தை எரிந்து பிடித்து கொண்டிருந்தான்..
 
அம்சவேணி: (சுவற்றில் பந்து பட்ட தடங்களை பார்த்து விட்டு கோபத்துடன்) ஏடா எதுக்கு இப்டி சுவத்த இப்படி வீணாக்கிட்டு இருக்குற.. அந்த பந்த தூர போடு இல்லனா வெளிய போய் விளையாடு போ..
 
மறுபடியும் அம்மாவை முறைத்து பார்த்தவாறே "ச்ச்சே!!! இந்த வீட்டுல நிம்மதியா தனியா கூட உக்கார முடியல" என சொல்லிவிட்டு தனது கையில் இருந்த பந்தை இம்முறை கோபத்துடன் தனது பலத்தை கூட்டி சுவற்றில் ஓங்கி எரிய பந்து அதிக வேகத்துடன் போய் சுவற்றில் பட்டு அதே அதிக வேகத்துடன் திரும்பி அவன் முகத்தை நோக்கி வர, இம்முறை கிஷோர் பந்தை பிடிப்பதற்கு அவன் கையை எடுப்பதற்குள் அவன் வலது கண்ணுக்கு சற்று மேலே கண்ணாம்பட்டையை அந்த பந்து பதம் பார்த்தது பலமாக.. (அம்மாவை உதாசின படுத்தியதர்காக இருக்கும்)
 
கிஷோர்: ஆஆஆஅஆ!!!!!!!!!!!! (கண்ணை பொத்திக்கொண்டே)
 
"அய்யயோ!!" என வேகமாக அவனருகே வந்த அம்சவேணி கண்ணை பொத்தி இருந்த அவன் கைகளை பிரித்து பார்த்தாள்.. சிறியதாக வீக்கம் இருந்தது.."ஒன்னும் இல்லப்பா ஒன்னும் இல்லப்பா" என தாய்க்கே உரிய பாசத்துடன் அடி பட்ட இடத்தை தேய்த்துக்கொண்டே "ஏண்டா உனக்கு அம்புட்டு கோவம் வருது உனக்கு, அம்மா அப்டி என்ன சொல்லிட்டேன் உன்ன.. சாரி ப்பா இனிமேல் அம்மா உன்ன எதுவும் சொல்ல மாட்டேன்"
 
மனது இறங்கிய கிஷோர்: அம்மா சாரி லாம் சொல்லாத மா.. நான் தான் சாரி சொல்லணும்.. எதோ ஒன்னு மனசுல நினைச்சுட்டு தேவை இல்லாம உன்மேல கோவப்பட்டேன்..
 
அம்சவேணி: சரி தங்கம்!! தைலம் தேய்ச்சு விட்டா சரியா போய்டும் வீக்கம்.. அது என்னப்பா மனசுல ஏதோ ஒன்னு..
 
கிஷோர்: ஒன்னுமில்லம்மா விடு.. எனக்கு பசிக்குது.. சாப்பாடு ஏதாச்சும் வச்சுக்கொடு
 
அம்சவேணி: சாப்பாடு வச்சு தர்றேன்.. இப்போ பேச்சை மாத்தாம சொல்லு  மனசுல என்னன்னு.. நீ சொல்லலைனாலும் அம்மாக்கு ஒன்னு தோணுது நீ எதுக்கு இப்டி இருக்க ன்னு..
 
கிஷோர்: ஆமா பெரிய சைக்காலஜி டாக்டர், என்னன்னு சொல்லு பாப்போம்..
 
அம்சவேணி: சைக்காலஜி டாக்டர் லாம் இல்லடா.. கிஷோரோட அம்மா வ சொல்றேன்.. ஒரு பொண்ணு தான காரணம்..
 
கிஷோர்: (மனசுக்குள் அய்யயோ) அம்ம்ம்ம்ம்மா!!!!!!! அப்டிலாம் ஒண்ணும் இல்ல.. நீயே ஏதாச்சும் நினைக்காத. இப்போ எனக்கு சாப்பாடு வச்சு கொடு..
 
அம்சவேணி: ச்சும்மா சோறு சோறுன்னு சொல்லாத டா திண்ணிப்பண்டாரம்.. எல்லா அப்பாவி பசங்களோட அம்மாவுக்கும் தெரியும் தன்னோட பசங்களோட வாழ்க்கை ல எப்போ ஒரு பொண்ணு வருதுன்னு.. 27 வயசு ல ஆச்சும் உன் வாழ்க்கை ல ஒரு பொண்ணு வருது ன்னு அம்மாக்கு சந்தோசம் தான்டா.. அது மட்டும் இல்லாம உனக்கு பொய்யே சொல்ல தெரியல.. அதனால சொல்லு யாரு அந்த பொண்ணு ன்னு..
 
கிஷோர் எதுவும் சொல்லாமல் சோகமாக குனிந்து கொண்டு தரையை நகத்தால் சொரண்டி கொண்டிருந்தான்..
 
அம்சவேணி: அட!! என்னடா பொம்பள பிள்ள மாதிரி நகத்தால தரையை சொரண்டிட்டு இருக்குற.. ஆம்பள பையன் தைரியமா அம்மா இது தான் விஷயம் ன்னு சொல்ல வேண்டாமா..
 
கிஷோர்: (விட்டா அம்மா என்னை ரொம்ப கேவலம் படுத்திரும் ன்னு நினைச்சுட்டு) அம்மா சொல்றதுக்கு லாம் ஒன்னும் இல்ல.. ஆனா அது சொல்லியும் இப்போ எதுவும் ஆக போறது இல்ல.. அதனால இத இப்டியே விட்று..
 
அம்சவேணி: முதல்ல என்னனாச்சும் சொல்லு டா.. அப்புறம் விடலாமா வேண்டாமா ன்னு அம்மா சொல்றேன்.. இப்டி ஒரு அம்மா யாருக்கும் கிடைக்க மாட்டாங்க.. ஓவரா ஸீன் பண்ணாம சொல்லு.
 
கிஷோர்: இன்னைக்கு தான் மா பாத்தேன்.. பாத்து பேசுன வரைக்கும் நல்ல பொண்ணு மாதிரி தான் இருக்கு.. செம அழகு செம ஹோம்லி.. நீ பாத்தா உனக்கு பிடிக்கும்.. ஆனா இதெல்லாம் எதுக்கு அந்த பொண்ணு வேற யாரையோ லவ் பண்ணுது கேள்வி பட்டேன்..
 
அம்சவேணி: என்னது கேள்வி பட்டியா?? அந்த பொண்ணு உங்கிட்ட ஏதாச்சும் சொல்லுச்சா டா??
 
கிஷோர்: இல்லம்மா அந்த பொண்ணு என்னை விரட்டி விட்றதுலயே குறியா இருந்துச்சு.. இதுல நான் எப்படி இதெல்லாம் கேக்குறது..
 
அம்சவேணி: அப்போ அந்த பொண்ணு எதுவும் சொல்லல.. வேற யாரோ சொல்லிருக்காங்க அப்டிதான டா.. மத்தவங்க சொல்றது லாம் நீ பெருசா எடுத்துக்காத.. நீ அந்த பொண்ணு கிட்ட பேசு நல்ல முறைல.. ஒரு நேரம் வரும் போது இதெல்லாம் பத்தி கேளுடா.. ஆனா ஒன்னு நீ அந்த பொண்ணு பத்தி மனசுல ஆசை எதுவும் வலத்துக்க கூடாது.. எனக்கு என் புள்ள முக்கியம்.. சரியா??
 
கிஷோர்: (முகத்தில் சிரிப்புடன்) சரிம்மா பேசி பாக்குறேன்.. அம்மா உன்கிட்ட பேசுனதுக்கு அப்புறம் தான் மா கொஞ்சம் நிம்மதியாவும் இருக்கு சந்தோஷமாவும் இருக்கு.. ஆனா எப்டிமா நீ (சிறிது ஆச்சரியத்துடன்)
 
அம்சவேணி: என்னடா எப்டிமா நீ.. 
 
கிஷோர்: எப்படி லவ் பத்தி இவ்ளோ பேசுற.. கல்யாணத்துக்கு முன்னாடி நீ ஏதாச்சும் (அம்மாவை பார்த்து சிரித்துக்கொண்டே கேட்டான்)
 
அம்சவேணி: அடி பிச்சு போடுவேன்.. உன் தம்பிக்கு அம்மா தான் டா ஒரு வருசமா லவ் கவுன்சிலர்..
 
கிஷோர்: தம்பி லவ் பண்ணுறானா?? இது எப்போ இருந்தும்மா??
 
அம்சவேணி: என்ன நொப்ப இருந்தும்மா.. அதான் சொல்றேன்லடா ஒரு வருஷம் ன்னு.. உன்னை விட 4 வயசு சின்ன பையன் அவன்.. நீயும் இருக்கியே..
 
கிஷோர்: சரி விடு.. எங்க அவன்?? நான் வெளிய போகும் போது இருந்தான்.. இப்போ காணோம்??
 
அம்சவேணி: உன் பிரண்ட் ராகுல் ஓட சூப்பர் மார்க்கெட் க்கு போயிருக்கான் டா.. அது என்ன மரகதம் சூப்பர் மார்க்கெட் தான??
 
கிஷோர்: பக்கத்துல இருக்குற கடைக்கு போக வேண்டி தானே.. ஏன் அவ்ளோ தூரம் இருக்குற கடைக்கு போறான்.. என் பேரை ஏதாச்சும் டிஸ்கவுண்ட் கேட்டு அசிங்க படுத்திடாம..
 
அம்சவேணி: ச்சேய்!!! உன் புத்திய பாரு.. ராம் உனக்கு தம்பியா இருந்தாலும் அவன் எப்போவும் உனக்கு அண்ணன் மாதிரி நடந்துப்பான் டா.. அதான் இன்னைக்கு நீ உன் பிரண்ட் ராகுல் வாட்ச் ரிப்பேர் பண்றதுக்கு நீ எடுபிடி மாதிரி போனில்ல.. (கிஷோரின் முகம் மாற) அச்சோ மன்னிச்சுரு ப்பா, உதவி பண்ண போனில்ல.. அத பாத்துட்டு என்கிட்டே கேட்டான் அவன் வாட்ச் அவன் ரிப்பேர் பண்ணாம எதுக்கு அண்ணன் கிட்ட கொடுத்து ஏவி விட்றான்.. பணக்கார திமிரு காட்டுறான் போல அண்ணன் கிட்ட.. இவனை மாதிரி ஆளுங்க கிட்ட லாம் ஜாக்கிரதை யா  இருக்கணும் இல்லனா ஏறி மேஞ்சுடுவாங்க ன்னு சொன்னான்..
 
கிஷோர்: ம்மா அவன் ஏவி விடல.. அவன் பிஸி ன்னு சொன்னான் அதான் நானே கேட்டேன் கொடுடா வாங்கினேன்..
 
மக்களே எல்லாம் பொய்.. ராகுல் பிஸி யும் இல்ல.. கிஷோர் கேட்டு வாங்கவும் இல்ல.. ராகுல் தான் ஏவி விட்டான்.. இப்போ அம்மா விடம் சமாளிக்குறான்..
 
அம்சவேணி: ஏதோ பிஸி டா.. அவனவன் வேலையை அவனவன் தான் பாக்கணும்.. அதுதான் முறை.. அப்புறம் அந்த பையன் ராகுல் பத்தி ராம் கேட்டான்.. நீ தான் ராகுல் பத்தி என்கிட்டே சொல்லிருக்கில்ல அது சொன்னேன்.. அப்புறம் அந்த பையன் லீவு நாள்ல சூப்பர் மார்க்கெட் ல தான் இருப்பான் ன்னு சொன்னில்ல அதுவும் சொன்னேன்.. அதான் நான் போயி அவன் எப்படி ன்னு பாத்துட்டு வர்றேன் ன்னு சொல்லிட்டு போனான்.. 
 
கிஷோர் தன்  அம்மாவிடம் "ராகுல் இவ்ளோ நேரம் என்கூட தான் மா பீனிக்ஸ் சூப்பர் மால் ல இருந்தான் கிளம்பும் போது கூட வீட்டுக்கு தான் போறேன் ன்னு சொன்னான்.. தம்பி அங்க போய் டைம் தான் வேஸ்ட்.. எதுக்கு அவனுக்கு இந்த CID வேலை லாம்" என சொல்லிவிட்டு தன் தம்பி தனக்காக அக்கறையுடன் இருப்பதை பற்றி நினைத்து கொண்டிருக்க 
 
அம்சவேணி: கொஞ்ச நேரத்துல அவன் வந்துருவான்.. வந்ததும் அண்ணனும் தம்பியும் பேசிக்கோங்க.. நான் இப்போ போய் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்..
 
இங்கே ராம் சூப்பர் மார்க்கெட்டில் எந்த பொருளையும் வாங்காமல் சுத்தி முத்தி பார்த்துக் கொண்டிருக்க.. அவன் பின்னாலிருந்து ஒரு கை அவன் முதுகை இருமுறை தட்டி அழைத்தது..

No comments:

Post a Comment