“யேஏஏஏஏ…” என்றபடி கிஷோரின் அம்மா புவனேஷ்வரி கிஷோரை கட்டி அணைத்து கன்னத்தில் நெற்றியில் மாற்றி மாற்றி முத்தமிட்டு “டேய் நான் உன்னை என்னமோ ன்னு நினைச்சேன் டா.. அவங்க வீட்டுல பேசி சம்மதம் வாங்குறதுக்கு எப்படியும் ஒரு வருஷம் ஆக்கிருவ ன்னு நினச்சேன்.. ஆனா கலைய வீட்டுல விட்டுட்டு வர்றேன் ன்னு சொல்லிட்டு போயிட்டு அவங்க அப்பா கிட்ட சம்மதம் வாங்கிட்டு வந்துருக்க.. என் தங்கோம்ம்ம்…… உம்மாஆஆ”
கிஷோர்: ஐயோ போதும்மா சின்ன பிள்ளையை கொஞ்சுற மாதிரி கொஞ்சிட்டு இருக்குற.. நான் எதுவும் பிளான் பண்ணி போகல.. எல்லாம் தானா நடந்திருச்சு ம்மா..
ராம்: ம்மா எனக்கு இவன் மேல சுத்தமா நம்பிக்கையே இல்ல.. அண்ணி தான் அவங்க அப்பாகிட்ட பேசி சம்மதிக்க வச்சிருப்பாங்க ன்னு தோணுது..
புவனேஷ்வரி: இருக்கட்டும் டா.. இவ்ளோ தைரியமான பொண்ணை செலக்ட் பண்ணது அவன் தான..
நாகராஜன்: ம்ம்ம் சரி நீங்க ரெண்டு பேரும் இருங்க.. நானும் அம்மாவும் ஜோசியர் வீட்டு வரைக்கும் போயிட்டு நிச்சயதார்தத்துக்கு நல்ல நாள் பாத்துட்டு வர்றோம்..
எல்லாம் நல்லபடியாக சென்றாலும், ஏதோ ஒரு பெரிய பாரம் தலைமேல் இருப்பதாக கிஷோர் உணர்ந்தான்.. ராகுல் தான் அந்த பாரம் என்று அவன் சொல்லிக்கொண்டாலும் அவன் மனமானது அதை விட பெரிய பாரமொன்று இருக்கிறது, அதை எப்படி சமாளிப்பாய் என்று கேள்வி கேட்டது.. கண்களை இறுக்க மூடி மூளையை போட்டு பிசைய, அந்த பாரம் என்னவென்று அவனுக்கு விளக்கியது..
“எவ்ளோ நாள் தான் இதை பத்தி பேசாம இருக்குறது.. இன்னைக்கு முழுசா பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டணும்” என்ற வைராக்கியத்தோடு கிஷோர் எழுந்து ராமின் அறைக்கு சென்று “தம்பி…. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் டா”
ராம்: ஹாஹா முக்கியமான விஷயமா.. நேரா வந்து இதுதான் விஷயம் ன்னு பேச வேண்டி தான.. வித்தியாசமா கேக்குற..
கிஷோர்: (நீண்ட பெருமூச்சு விட்டு) இல்ல அது.. நீ அன்னைக்கு
ராமின் கைபேசி க்கு மூக்கு வேர்த்தது போல சினுங்கியது..
ராம்: ண்ணே!! இங்க பாரு வனிதா போன் போட்டுட்டா.. எடுக்கலேனா என்னை தொலைச்சுருவா.. நாம அப்புறம் பேசுவோம்..
“அவகிட்ட அப்புறம் பேசு டா.. நான் ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும்” என்று சொல்ல நினைத்தாலும் அதை சொல்ல முடியாமல், ஒரு வித இயலாமையோடு கிஷோர் தயக்கத்தோடு நகராமல் நின்றிருந்தான்.. அவன் மனதில் இருந்த சுமையை பற்றி ராமிடம் பேசுவதற்கு அவன் மனதளவில் முழுமையாக தயாராகவில்லை..
ராம்: (இன்னும் என்ன என்பது போல் கிஷோரை பார்த்து நினைத்து கெஞ்சலாக) ண்ணே!! கொஞ்சம் தனியா பேசணும்..
கிஷோர் அதே நீண்ட பெருமூச்சு விட்டு கதவை சாத்திவிட்டு வெளியே சென்றான்..
கட்டிலில் கலை தலைகாணியை கட்டிப்பிடித்த படி உதட்டில் புன்னகையுடனும் கண்களில் கிஷோருடன் சேர்ந்து வாழ போகும் வாழ்க்கை கனவுகளுடனும் நிம்மதியாக இருந்தாள்.. அவள் மனதில் ஒரு மூலையில் ராகுல் பற்றிய சிறிய அச்சம் இருந்தாலும் அதை ஓரம் கட்டிவிட்டு தனது வாழ்வை தன்னை முற்றிலுமாக புரிந்து கொண்ட கிஷோருடன் வாழ போகிறோம் என்ற இன்பத்தில் மூழ்கி இருந்தாள்..
அவள் கண்கள் அவ்வப்பொழுது மேசையில் இருந்த கைப்பேசியை நோட்டம் விட்டு கொண்டிருந்தது.. கிஷோரிடம் இருந்து அழைப்பு வரும் என்று வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்தாள்.. திடிரென்று கைப்பேசியின் திரை மின்ன, கட்டிலில் இருந்து துள்ளி எழுந்து பார்க்க எதோ ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது..
கலை: “ஹலோ!!”
மறுமுனை: என் வீட்டுக்கு விளக்கேத்தி வைக்க போற ராசாத்தி.. என்னம்மா பண்ணுற..
கலைக்கு முகம் மலர்ந்து வாயெல்லாம் பல்லாக “அத்தை.. சும்மா தான் இருக்கேன்.. அப்புறம் எங்க அப்பா”
புவனேஷ்வரி: ஆமா உங்கப்பா சரி ன்னு சொல்லிட்டாங்களாமே.. ரொம்ப சந்தோசம் ம்மா.. கிஷோர் வந்ததும் சொன்னான்.. சொன்னதுமே உங்க மாமா என்னை கையோட ஜோசியர் வீட்டுக்கு கூட்டி வந்துட்டாரு.. சரி ம்மா உங்க அம்மா இருந்தா கொடேன்..
அய்யயோ அம்மா ஏதாச்சும் பேசி ஏழரையை இழுத்து விடுவாள் என்று பயந்து “ஆஹ்!! அது அம்மா வெளிய போயிருக்காங்க.. என்ன விஷயம் அத்தை சொல்லுங்க நான் அம்மா வந்ததும் சொல்லிடுறேன்”
புவனேஷ்வரி: அப்படியா குட்டி.. சரி ஜோசியர் உன் ஜாதகத்தையும் கேக்குறாரு.. அதான் உங்க அம்மா ட்ட கேட்டா முறையா இருக்கும் ன்னு நினச்சேன்..
கலை: ஜாதகம் தான அத்தை.. அது நானே அனுப்பி விடுறேன் உங்களுக்கு..
புவனேஷ்வரி: இது தான் நம்பர்.. (மறுபக்கம் கணவரிடம் திரும்பி ஏங்க அது பேர் என்ன ஆப்பா.. என்னது வாட்டப்பா.. ஓ வாட்ஸ்ஆப் ஆ) குட்டி மாமா நம்பர் சொல்றேன்.. நீ அதுல வாட்ஸ்ஆப் ல அனுப்பி விட்டுரு சரியா.. வச்சுரட்டுமா.. சரி குட்டி..
கலை ஜாதகத்தை எடுத்து அனுப்பி விட்டு மறுபடியும் மகிழ்ச்சியோடு சாய அவளது கைப்பேசி திரை மின்னியது.. எடுத்து பார்க்க சுபர்ணா என்று இருந்தது..
கலை வெறுப்புடன் எடுத்து காதில் வைத்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.. மறுபுறமும் சில வினாடிகள் அமைதி.. சில வினாடிகள் கடந்த பின்னர் அமைதியையும் நிம்மதியையும் கலைக்குமாறு சுபர்ணாவின் குரல் ஒலித்தது..
சுபர்ணா: ஹலோ கலை..
அந்த குரலை கேட்டதும் கலைக்கு கோபம் இன்னும் அதிகம் வர, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்..
சுபர்ணா: கலை இருக்கியா?? கலை..
கலை: ம்ம்ம்…
சுபர்ணா: கலை எனக்கு தெரியும் நீ என்மேல ரொம்ப கோபத்துல இருப்ப ன்னு.. ஆனா ஒன்னும் உன்னை வேணும்னே வேலைல இருந்து போக சொல்லல.. அது ராகுல் தான்.. நான் முடியாது ன்னு சொன்னாலும் எங்க அப்பா ட்ட பேசி அதை நடக்க வைப்பான்.. பயித்திய காரன்..
கலை: அவன் பயித்தியம் சைக்கோ எனக்கு நல்லா தெரியும்.. இதை சொல்ல தான் நீ போன் போட்டியா??
சுபர்ணா: (இவ்வளவு நாள் தன்னை மரியாதையாக அழைத்து கொண்டிருந்த கலை இன்று ஒருமையில் அழைத்தது சுபர்ணாக்கு வருத்தம் அளித்தாலும் இதற்கு தான் தகுதி ஆனவள் தான் என்று உணர்ந்து அமைதியாக) நான் அதுக்கு போன் போடல கலை..
கலை: உன் வேலை இல்லாம நான் கஷ்ட படுறேன் ன்னு கரிசனம் காட்டுறியா.. ஹாஹாஹா இப்போ தான் நல்லா இருக்கேன்.. என் வாழ்க்கை ல எல்லாம் நல்லா போகுது..
சுபர்ணா: எனக்கு உண்மையிலேயே ஹேப்பி தான் கலை.. ப்ளீஸ் நான் சொல்றது கொஞ்சம் பொறுமையா கேளேன்..
கலை: சீக்கிரம் சொல்லிட்டு வைங்க..
சுபர்ணா: இன்னைக்கு நீ அவனை அடிச்சதுக்கு அப்புறம் அவன் உங்க வீட்டுக்கு வந்தானா?
கலை: ஆமா அந்த சனியன் வந்தான்.. அந்த நாய்க்கு படத்துல வர்ற வில்லன் ன்னு நினைப்பு போல.. வீட்டுக்கு வந்து நாங்க தட்டுல வச்ச சாப்பாடை நாய் மாதிரி தின்னுட்டு போனான்..
சுபர்ணா: நீ அவனை திட்டுறதுக்கெல்லாம் நான் எதுவும் சொல்ல மாட்டேன் கலை.. இன் ஃபாக்ட் நீ திட்டுறது கூட சரி தான்.. அவன் உங்க வீட்டுல இருந்து வந்ததும் அவன் நேரா என் ஸ்டோர் க்கு தான் வந்தான்.. ரொம்ப நேரம் சைலன்ட் ஆ எதுவோ யோசிச்சுக்கிட்டு இருந்தான்..
கலை: அந்த நாய் என்ன வேணா பிளான் பண்ணட்டும்.. அது பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல.. நீங்களும் ஒன்னும் கவலை பட வேண்டிய அவசியம் இல்ல..
சுபர்ணா: என்ன கலை.. நான் சொல்ல வர்றதை ரெண்டு காது கொடுத்து கேக்க மாட்டியா?
கலை அமைதியாக இருந்தாள்..
சுபர்ணா: தேங்க்ஸ் கலை.. இந்த நாய் எவ்ளோ மோசமானவன் ன்னு எனக்கு தெரியும்.. நீ எதுவும் பாதிக்கப்பட கூடாது ன்னு சொல்றேன்.. அவன் அவ்ளோ நேரம் யோசிச்சுட்டு அடுத்து யாருக்கோ போன் போட்டு பேசிட்டு இருந்தான்.. நான் எதுவும் பெருசா கண்டுக்கல.. ஆனா அவன் பேசுறது என் காதுல தானா விழுந்தப்போ தான் கவனிச்சேன்..ரொம்ப வித்தியாசமா சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தான்..
சரி யாருகிட்ட பேசுறான் ன்னு கொஞ்சம் எட்டி பாத்தப்போ “மஞ்சு” ன்னு நேம் இருந்துச்சு.. நீ கூட ஒரு தடவை உங்கம்மா நேம் கூட மஞ்சு ன்னு..
கலை என்ன சைலன்ட் ஆ இருக்குற.. கலை இருக்கியா??
கலை..
ஹலோ கலை..
கலை என்னாச்சு லைன் ல இருக்கியா??
கலையின் கைப்பேசியில் சுபர்ணா வின் குரல் வந்து கொண்டே இருக்க,, கலை அங்கு இல்லை.. தன் தாயின் பெயரை கேட்ட அந்த நொடியில் கைப்பேசியை அப்படியே மெத்தையில் போட்டுவிட்டு தன் தாயை தேடி கொலை வெறியுடன் வேகமாக எழுந்து சென்றாள்..
No comments:
Post a Comment